இந்தியருக்கு அடித்த ஜாக்பாட்.! லாட்டரியில் “க்யூஎக்ஸ் 50” காரும் , ரூ.39 லட்சம் பரிசுத்தொகை .!
- இந்தியாவை சார்ந்த ஸ்ரீஜித் என்பவர் ஐக்கிய அரபு எமிரேட்சில் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
- ரீஜித் ரூ.1800 கொடுத்து வாங்கிய சிறப்பு லாட்டரி சீட்டில் “க்யூஎக்ஸ் 50” எனப்படும் கார் ஒன்றும் ,ரூ.39 லட்சம் பரிசு தொகை கிடைத்து உள்ளது.
இந்தியாவை சார்ந்த ஸ்ரீஜித் என்பவர் ஐக்கிய அரபு எமிரேட்சில் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார்.துபாயில் வருடாவருடம் ஷாப்பிங் திருவிழா நடைபெறும்.இந்த திருவிழாவில் கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து ஸ்ரீஜித் ரூ.1800 கொடுத்து சிறப்பு லாட்டரி சீட்டு வாங்கி வந்து உள்ளார்.
இந்த லாட்டரி குலுக்கலில் தினமும் “க்யூஎக்ஸ் 50” எனப்படும் கார் ஒன்றும் ,ரூ.39 லட்சம்பரிசு தொகை வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் இந்தவருடமும் துபாயில் நடைபெற்ற 25-வது ஆண்டு ஷாப்பிங் திருவிழாவிற்கு சென்றபோது ஸ்ரீஜித் வழக்கம்போல சிறப்பு லாட்டரி சீட்டு வாங்கி உள்ளார்.
இதை தொடர்ந்து ஸ்ரீஜித் வாங்கிய சிறப்பு லாட்டரி சீட்டுக்கு “க்யூஎக்ஸ் 50” எனப்படும் கார் ஒன்றும் ,ரூ.39 லட்சம்பரிசு தொகை விழுந்து உள்ளது. இந்நிலையில் இது குறித்து ஸ்ரீஜித் கூறுகையில் ,எனக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.தற்போது என் மனைவி கர்ப்பமாக உள்ளார்.எனவே இந்த பரிசு தொகை எனது குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உதவும் என கூறினார்.