சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர ஆர்வம் உள்ளதாக நடிகரும், தற்காப்பு கலை நிபுணருமாகிய ஜாக்கி சான் கூறியுள்ளார்.
பிரபல ஹாலிவுட் நடிகரும், தற்காப்பு கலை நிபுணருமாகியவர் தான் ஜாக்கி சான். இவர் நடிகர் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர் என பன்முக திறமை கொண்டவர். தனது 8 வயது முதலே நடிக்கத் தொடங்கிய இவர் பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். சீன பிரபலம் ஜாக்கி சானுக்கு உலகம் முழுதுமுள்ள பல கோடிக்கணக்கானோர் ரசிகர்களாக உள்ளனர். குறிப்பாக, தமிழகத்திலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
ஹாங்காங்கில் ஆதிக்கம் செலுத்துவதற்கான தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீன அரசு நடைமுறைப்படுத்திய போது ஹாங்காங் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தியுள்ளனர். இந்த விவகாரத்தில் சீனாவிற்கு ஆதரவாக ஜாக்கி கடந்த ஆண்டு கருத்து தெரிவித்தது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று சீன திரைப்பட சங்கத்தினர் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சீன திரைப்பட சங்கத்தின் துணைத் தலைவர் ஜாக்கி, கடந்த சில ஆண்டுகளில் சீன மிக வேகமாக முன்னேறி வருவதாக கூறியுள்ளார்.
இதை பல நாடுகளுக்கு செல்லும் பொழுது தான் நேரடியாக உணர்ந்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் நமது சிவப்பு கொடிக்கு உலகம் முழுவதிலும் மரியாதையை அதிக அளவில் கிடைக்கிறது. சீன குடிமகனாக இருப்பதில் நான் பெருமை அடைகிறேன் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் குறுகிய காலகட்டத்திலேயே சீன கம்யூனிஸ்ட் கட்சி கொடுத்த வாக்குறுதிகளை சிறப்பாக நிறைவேற்றி வருவதால் அந்த கட்சியில் உறுப்பினராக சேர்வதற்கு எனக்கு ஆர்வம் உள்ளது எனவும் ஜாக்கி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…