ஹாலிவுட்டில் கால்பதிக்கும் ஜி.வி..,கோலிவூட் கொண்டாட்டம் இதோ

Default Image
  • ஹாலிவுட்டில் நடிகர் ஜி.வி கால்பதித்துள்ளார் 
  • படம் விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு தகவல்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும் சிறந்த இசையமைப்பாளாராக வலம் வருபவர் வி.பிரகாஷ் இவர் ஹாலிவுட்டில் ஒரு ஆங்கில படத்தில் நடித்து உள்ளார்.இவருடன் பல வெற்றி படங்களை கொடுத்து தனக்கென்று ஓர் இடத்தை பிடித்த நடிகர் நெப்போலியனும்  முதல்முறையாக ஹாலிவூட்டில் அடியெடுத்து வைக்கிறார்.
இவர்கள் இருவரும் இணையும் இப்படத்துக்கு ட்ராப் சிட்டி (Trap City) என பெயர் வைக்கப்பட்டுள்ளது.இப்படத்தை கைபா பிலிம்ஸ் (Kyyba Films), நாசிக் ராவ் மீடியா (Nasik Rav Media) மற்றும் கிங்டம் ஓவர் ஏவரிதிங் (Kingdom Over Everything – KOE) என்ற மூன்று சிறந்த நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
 ஜிவி பிரகாஷ் மற்றும் நெப்போலியன் உடன் சேர்ந்து டிராபிக் தண்டர் (Tropic Thunder), பர்சி ஜாக்சன் (Percy Jackson) , பிக் மாமா ஹவுஸ் (Big Momma House) போன்ற பிரபல ஆங்கில படங்களில் நடித்த பிராண்டன் டி ஜாக்சனும் (Brandon T Jackson) நடித்து உள்ளார்கள். படத்தை ரிக்கி பற்செல் (Ricky Burchell)  இயக்கி உள்ளார்.
ஏழ்மையான சூழ்நிலையில் வாடும் ஒரு ராப் (Rap) பாடகனின் கதைதான் இந்த ட்ராப் சிட்டி.  வறுமையின் காரணமாக ராப் பாடகன் ஒரு போதைப்பொருள் கும்பலின் தலைவனிடம் வேலைக்கு சேர்கிறான் அங்கு சேர்ந்தபின்  அவன் எழுதிய ஒரு பாடல் ஆனது உலகம் முழுவதும் பிரபலமாகிறது. பாடல் பிரபலமாகும் போது துரதிஸ்டவசமாக அவன் கைது செய்யப்படுகிறான். ஒரு பக்கம் அவன் புகழும் பரவுகிறது. இதனிடையே அவனை கொல்ல ஒரு முயற்சியும் நடக்கிறது. அதன்பின் அந்த பாடகன் என்ன ஆனான் என்பதே கதை.
இந்த கதை அமெரிக்காவில் உள்ள நேஷவில் என்ற இடத்தில் படமாக்கப்பட்டு உள்ளது. படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில்  படத்தை வெளியிடுவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது என்று படத்தின் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளார்கள். படம் இந்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Congress MPs Protest - Mallikarjun Kharge - Rahul Gandhi - Priyanka gandhi
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala