80 வயது ஆனவர்கள் இறந்தால் பரவாயில்லை -இத்தாலி அரசு.!
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி அச்சுறுத்தி வருகிறது. கொரோனா தினமும் உலகம் முழுவதும் உயிர்பலி வாங்கி வருகிறது.கொரோனா வைரஸ் சீனா அடுத்து ஈரான், இத்தாலி ஆகிய நாடுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் இத்தாலியில் கொரோனா வைரசால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,268 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,157 ஆக உயர்ந்துள்ளது.
இத்தாலியில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆனாலும் தினமும் பலி எண்ணிக்கை, மற்றும் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.இந்நிலையில் இத்தாலியில் 5,090 தீவிர சிகிச்சை படுக்கையறைகள் மட்டுமே உள்ளதால் தீவிர சிகிக்சை பிரிவுவில் படுக்கையறை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனால் தனியார் கிளினிக்குகள், நர்சிங் ஹோம்ஸ் மற்றும் கூடாரங்களில் புதிய படுக்கை வசதி தேவை அதிகரித்து உள்ளது. மேலும் இத்தாலியில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களும் தேவை அதிகரித்து உள்ளது.
இதனால் 80 வயது மேற்பட்டோர் இறந்தாலும் பரவாயில்லை என இத்தாலி அரசு தரப்பில் கூறப்பட்டதாக தி டெலிகிராப் என்ற இதழில் செய்தி வெளியாகி உள்ளது.மேலும் இத்தாலி அரசு பொதுமக்கள் அவசர வேலை தவிர பிற காரணங்களுக்காக தாங்கள் வசிக்கும் இடங்களில் இருந்து மற்ற இடங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.