இது என்னடா வித்தியாசமா இருக்கு….!!! மாதுளை பழம் தயிர் சாதம் கேள்விப்பட்டுருக்கீங்களா….?
மாதுளை பழத்தில் பல வகையான உணவு வகைகள் தயாரிக்கலாம். மாதுளை, ஜூஸ், கேக், அல்வா என பல வகையான உணவு பொருட்கள் தயாரிக்கலாம். ஆனால் மாதுளை பழ தயிர் சாதம் கேள்விபட்டுருக்கிறீர்களா? இப்பொது மாதுளை பழ தயிர் சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
- அரிசி – 1 கப்
- தயிர் – 1 கப்
- காய்ச்சி ஆற வைத்த பால் – 1 1/2 கப்
- மாதுளை – 1 கப்
- தண்ணீர் – அரை கப்
- உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை :
முதலில் அரிசியை நன்கு கழுவி, நீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி கழுவி வைத்துள்ள அரிசியையும் போட்டு, சாதம் போன்று நன்கு வேகா வைக்க வேண்டும்.
பின்பு அதனை இறக்கி லேசாக குளிர வைக்க வேண்டும். பிறகு அதில் பால், தயிர், உப்பு மாதுளை மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி, 30 நிமிடம் கழித்து பரிமாற்ற வேண்டும். இப்பொது மாதுளை பழ தயிர் சாதம் ரெடி.