கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் முதலிடம் பிடித்த இத்தாலி!
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் நோயானது, பல்லாயிரக்கணக்கான உயிரிழப்பை ஏற்படுத்தியது. இந்த நோய் அந்த நாட்டோடு நின்று விடாமல், மற்ற நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. சீனாவை தொடர்ந்து, இந்த நோயின் தாக்கம் மிக தீவிரமாக இத்தாலியிலும் பரவி வந்த நிலையில், அங்கும் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு இத்தாலியில் அதிகபட்சமாக 14,681 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் 11,198 பேரும், பிரான்சில் 6501 பேரும், பிரிட்டனில் 3605 பேரும், சீனாவில் 3322 பேரும் உயிரிழந்துள்ளனர்.