இத்தாலியில் 30 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை – திகைப்பில் இத்தாலி!
கொரோனாவால் இத்தாலியில் பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளதால் அந்நாட்டு மக்கள் திகைப்பில் உள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் 4,014,311 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 276,237 பேர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் இதன் தாக்கம் குறையாமல் அதிகரித்து கொண்டே செல்கிறது.
இத்தாலியிலும் கொரோனாவுக்கு 217,185 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கட்டுப்படுத்த முடியாமல் இத்தாலி அரசு தவித்து வரும் நிலையில் தற்பொழுது 30,201 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 99 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமாகி வீடு திரும்பியுமுள்ளனர்.
இறந்தவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்தையும் கடந்து சென்று கொண்டே இருப்பதால் இத்தாலி அரசும், மக்களும் பேரதிர்ச்சியில் உள்ளனர்.