சமூக இடைவெளியை மீறினால் அலர்ட் செய்யும் கருவி.! அருங்காட்சியகத்தின் அசத்தல் ஐடியா.!
இத்தாலியில் உள்ள அருங்காட்சியகத்திற்கு வரும் பார்வையாளர்களின் கைகளில் எலக்ட்ரிக் டேக் கட்டாயமாக அணிவிக்கப்படுகிறது. இதன் மூலம் சமூக இடைவெளி உறுதி செய்யப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இருக்கிறது இத்தாலி. இந்த நாட்டில், இதுவரை 32 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
இரண்டு மாத கொரோனா கோரப்பிடியில் இருந்து தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு இத்தாலி நாடு திரும்பி வருகிறது. கடந்த 22ஆம் தேதி முதல் இத்தாலி நாட்டில் உள்ள பெர்காமோ என்ற இடத்தில் அகாடெமியா கர்ராரா அருங்காட்சியகம் உள்ளது.
அங்கு சமூக இடைவெளியை காண புது ஐடியாவை அறிமுகப்படுத்தியுள்ளனர். அதன் படி, அங்கு வரும் பார்வையாளர்களின் கைகளில் எலக்ட்ரிக் டேக்கை அணிவித்து விடுகின்றனர். அந்த கருவி 1.5 மீட்டர் சமூக இடைவெளி இல்லாமல் இன்னொருவரிடம் நெருங்கி சென்றால் அலர்ட் செய்துவிடும். இதனால், சமூக இடைவெளி அந்த மியூசியத்தில் கடைபிடிக்கப்படுவது உறுதிசெய்யப்படுகிறது.