அதிர்ஷ்டமும் ஆயுர்வேதமும் தான் கொரோனாவில் இருந்து என்னை மீட்டது – அல்லு சிரிஷ்!
ஆயுர்வேதமும் கொஞ்சம் அதிர்ஷ்டமும் நான் தன்னை கொரோனாவில் இருந்த பாதுகாத்ததாக தெலுங்கு இளம் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனின் தம்பி அல்லு சிரிஷ் அவர்கள் கூறியுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி இளம் நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் அவர்களின் தம்பி தான் நடிகர் அல்லு சிரிஷ். இவர் ராதா மோகன் அவர்களின் இயக்கத்தில் உருவாகிய கவுரவம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இந்நிலையில் அண்மையில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிலருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அங்கு கலந்துகொண்ட வருண் தேஜ், ராம்சரண் ஆகிய சில நடிகர்களுக்குகொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனை அடுத்து இந்த நிகழ்வில் அல்லு சிரிஷும் கலந்து கொண்டதால் அவரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். ஆனால் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என ரிசல்ட் வந்துள்ளது.
இதனை அடுத்து அல்லு சிரிஷ் கூறுகையில், ஒன்றுக்கு இரண்டு முறை பரிசோதனை செய்து கொண்டதில் நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், திருமண நிகழ்வு, வெளியூர் பயணம், படப்பிடிப்பு என அடிக்கடி வெளியே செல்லும் பொழுது நாம் கொரோனா பாதிக்கப்பட்ட ஒரு நபரையாவது சந்திக்காமல் இருந்துவிட முடியாது. ஆனால் அப்படி இருந்தும் எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்றால் அதற்கு காரணம் ஆயுர்வேதமும் கொஞ்சம் அதிர்ஷ்டமும் தான் காரணம் என கூறியுள்ளார் மேலும் நமது முன்னோர்கள் பயன்படுத்திய ஆயுர்வேதப் பொருட்கள் எல்லாம் இன்னும் காலாவதியாகிவிடவில்லை எனவும், அவை எல்லாம் அவர்கள் நமக்கு கொடுத்த காலம் கடந்து நிற்கும் பரிசு எனவும் அவர் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.