FIFA WORLD CUP 2018:தென் கொரியா அணிக்கு எதிரான போட்டியில் ஸ்வீடன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி!
ரஷியாவில் உலகக்கோப்பை கால்பந்து திருவிழா நடைபெற்று வருகிறது.
உலககோப்பை கால்பந்து போட்டியில் இன்று மூன்று ஆட்டங்கள் நடக்கின்றன. இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ‘எப்’ பிரிவில் உள்ள சுவீடன்- தென்கொரியா அணிகள் மோதியது.
தரவரிசையில் 24-வது இடத்தில் உள்ள சுவீடன் 2006-ம் ஆண்டுக்கு பிறகு உலககோப்பையில் விளையாடுகிறது.
இந்நிலையில் தென் கொரியா அணிக்கு எதிரான போட்டியில் ஸ்வீடன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.