வருமானவரி விவாகரம்- தவறு இழைத்தது ஆண்டவனே ஆனாலும் நடவடிக்கை பாயும்.!!செல்லூர் சீறல்

Default Image
  • வருமானவரி சோதனையில் சிக்கிய பிகில்..பரப்பான சோதனையில் சிக்கிய 77 கோடி 
  • வருமானவரி விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் அதில் அரசு தலையிடாது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் .சினிமா பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் தயாரிப்பு நிறுவனம் ஏ.ஜி.எஸ் ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.அன்புசெழியனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டது என்றும் ரூ.300 கோடி வரி ஏய்ப்பு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.நடிகர் விஜய்க்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று  வந்த நிலையில் தற்போது நிறைவடைந்துள்ளது.இந்த சோதனையால் தமிழ் சினிமா பரபரப்பாக காணப்படுகிறது.

Image result for BIGIL MOVIE IT RAID

இந்நிலையில் சினிமா பைனான்சியர் அன்புச் செழியன் உள்ளிட்டோர் வீடுகளில் வருமான வரிசோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.எனினும் பைனான்சியர் அன்புச் செழியன் ஆளுங்கட்சி அமைச்சரின் பினாமியா..?என்ற கேள்வியும் வட்டமடித்து வருகின்றது.

Image result for BIGIL MOVIE IT RAID

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ ஆண்டவனே தவறு செய்தாலும் உரிய நடவடிக்கை பாயும். குறித்து வருமானவரி விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் அதில் அரசு தலையிடாது என்று தெரிவித்துள்ளார்.

Image result for செல்லூர் ராஜூ

தங்களுக்கு பதவி ஆசை இருப்பதாக அதிமுக அமைச்சர் ஒருவர் பேசியது என்று அவரிடம் செய்தியாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர் பதவிக்கு ஆசைப்படுவது ஒன்றும் தவறு இல்லை ஆனால் அது வெறியாகத்தான் மாறக்கூடாது என்று பதிலளித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்