இரவு நேரத்திற்கு ஏற்ற உணவு இது தாங்க!
நம்மில் அதிகமானோர் உணவு என்ற ஒன்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதே இல்லை. இதனால், நமது உடலில் பல நோய்கள் ஏற்படுகிறது. எனவே எந்த வேளையில், எந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை அறிந்து சாப்பிட வேண்டும்.
தற்போது இந்த பதிவில் சுவையான மசாலா அப்பம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- ஆப்ப மாவு – 2 கப்
- எண்ணெய் – தேய்க்க
- துருவிய தேங்காய் – 2 மேசைக்கரண்டி
- சோம்பு/ பெருஞ்சீரகம் – கால் கரண்டி
- பச்சை மிளகாய் – 1
- வெங்காய – 100 கிராம்
- மஞ்சள் தூள் – கால் கரண்டி
செய்முறை
மேலே கொடுக்கப்பட்டுள்ள அணைத்து பொருட்களையும், ஒன்றாக சேர்த்து அரைக்க வேண்டும். அதனை அப்பா மாவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் தவாவை சூடாக்கி, ஆப்ப மாவை ஒவ்வொரு கரண்டியாக எடுத்து ஊற்ற வேண்டும்.
பின் ஆப்பத்தை சுற்றி எண்ணெய் ஊற்றி, சற்று நேரம் மூடி வைக்க வேண்டும். ஆப்பம் நன்கு அவிந்தவுடன், அப்பத்தை எடுக்க வேண்டும். இப்பொது சுவையான மசாலா ப்பம் தயார்.