தல அஜித்துடன் நடிக்காதது வருத்தம் அளிக்கிறது! வருத்தம் தெரிவித்த சிரிப்பழகி சினேகாவின் கணவர்!

- நடிகர் பிரசன்னா வெளியிட்டுள்ள அறிக்கை.
- தல அஜித்துடன் நடிக்காதது வருத்தம் அளிக்கிறது.
சமீபத்தில் தல அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் அஜித் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில், இந்த படத்தில் சிரிப்பழகி சினேகாவின் கணவரான நடிகர் பிரசன்னா முக்கியமான வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து நடிகர் பிரசன்னா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் ‘வலிமை படத்தில் அஜித்துடன் நான் நடிக்க வேண்டும் என்று பலரும் விரும்பி எனக்கு வாழ்த்து சொன்னீர்கள். அதற்கான பேச்சுவார்த்தை நடந்ததும் உண்மைதான். என்னுடைய திரைவாழ்க்கையில் மிகப்பெரிய அறிவிப்பாக இச்செய்தியை அறிவிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் துரதிருஷ்ட வசமாக அந்த வாய்ப்பு எனக்கு இந்தமுறை கிடைக்கவில்லை.
விரைவில் தல அஜித்துடன் இணைந்து நடிப்பேன் என்று நம்புகிறேன் என்றும், அஜித்துடன் நடிக்க முடியாதது எனக்கு மிகுந்த கவலையளித்தாலும் உங்களுடைய அன்பால் இதிலிருந்து மீண்டு விட்டேன்.” என்றும் கூறியுள்ளார்.
Dear all pic.twitter.com/Lu8YweJzUC
— Prasanna (@Prasanna_actor) January 21, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
2 நாள் பயணமாக சவுதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி.!
April 22, 2025