bigg boss 7 tamil [File Image]
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்டு அதில் மக்களிடம் குறைவான வாக்குகள் யார் வாங்குகிறார்களோ அவர்கள் வீட்டை விட்டு எலிமினேஷன் செய்யப்பட்டு வெளியேறி வருகிறார்கள். அந்த வகையில், கடைசியாக கடந்த வாரத்திற்கு முன்பு வனிதாவின் மகள் ஜோவிகா குறைவான வாக்குகளை பெற்று வீட்டை விட்டு வெளியேறி இருந்தார்.
அவரை தொடர்ந்து அதற்கு அடுத்தவரமான அதாவது கடந்த வாரம் சென்னையில் கனமழை பெய்து வெள்ளம் பெருக்கு எடுத்து ஓடிய காரணத்தால் பெரும்பாலான மக்கள் வாக்கு அளிக்க தவறிய காரணத்தால் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று விஜய் தொலைக்காட்சியே அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.
கடந்த வாரத்தை தொடர்ந்து இந்த வாரம் கண்டிப்பாக எலிமினேஷன் இருக்கும் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால். அதில் கூடுதலான தகவல் என்னவென்றால், கடந்த வாரம் எலிமினேஷன் இல்லாத காரணத்தால் இந்த வாரம் டபுள் எலிமினேஷன் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தப்பை ஒத்துக் கொள்கிறேன் ஆனா வருத்தப்பட மாட்டேன்! பிக் பாஸ் ஜோவிகா எழுதிய கடிதம்!
போட்டியும் நெருங்கி வரும் நிலையில் விதிமுறைப்படி இத்தனை போட்டியாளர்களை தான் வீட்டுற்குள் இருக்கவேண்டும் என்று விஜய் தொலைக்காட்சி ஒரு விடுமுறை வைத்த இருப்பார்கள். எனவே, கடந்த வாரம் எலிமினேஷன் இல்லாத காரணத்தால் இந்த வாரம் டபுள் எலிமினேஷன் நடைபெற்று இரண்டு போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிற்குள் நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் போட்டியாளரால் யார் எல்லாம் என்றால் கூல் சுரேஷ், விஷ்ணு, நிக்சன், அர்ச்சனா , தினேஷ், அனன்யா, ஆகியோர் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதில் யார் குறைவான மக்கள் வாக்குகளை பெருகிறாரோ அந்த போட்டியாளர் வீட்டை விட்டு வெளியேறுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருத்தர் மட்டும் தான் வெளியேற போகிறாரா? அல்லது டபுள் எலிமினேஷனா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
காந்திநகர் : நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் அனந்த்நாத் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய…
காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தான் பொறுப்பல்ல என்று லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவர் சைஃபுல்லா…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர்…
மதுபானி : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் பயங்கரவாதிகள் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை டார்கெட் செய்து அவர்கள்…
சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும்…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல்…