அரசின் ஒவ்வோரு தவறும் உயிர்களை பலி வாங்குவது புரியவில்லையா-கமல்ஹாசன்.!
அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குவது புரியவில்லையா தலைமைக்கு.என்று கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக அதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் நாடு முழுவதும் மே 17 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் சில மாவட்டங்களுக்கு ஊரடங்கில் தளர்வு செய்யவும் ஆணை பிறப்பித்துள்ளது. இதனால் சமூக இடைவெளியை பின்பற்றி சில அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளும் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் டாஸ்மாக் கடைகளையும் திறக்கப்படுமோ என்ற அச்சம் பலரிடமும் இருந்து வந்தது. அண்டை மாநிலங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் பயமின்றி சமூக விலகலை கடைப்பிடிக்காமல் மது வாங்க வரிசையில் நிற்கின்றனர். இந்த நிலையில் தற்போது தமிழகத்திலும் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
சமீபத்தில் கோயம்பேடு மார்க்கெட் காரணமாக பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது போன்று டாஸ்மாக் கடைகளை திறந்தால் கொரோனா தொற்று பரவும் அபாயம் கூடுதல் உள்ளதாக பலர் அரசின் மீது கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் , கோயம்பேடை காப்பாற்ற இயலாமல் தொற்று எண்ணிக்கையை அதிகப்படுத்திய அரசு, இப்பொழுது டாஸ்மாக்கை திறக்குமாம்,. அரசின் ஒவ்வோரு தவறும் உயிர்களை பலி வாங்குவது புரியவில்லையா தலைமைக்கு என்று பதிவிட்டுள்ளார். தற்போது அந்த டுவிட்டுக்கு பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
கோயம்பேடை காப்பாற்ற இயலாமல் தொற்று எண்ணிக்கையை அதிகப் படுத்திய அரசு, இப்பொழுது டாஸ்மாக்கை திறக்குமாம்.
அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குவது புரியவில்லையா தலைமைக்கு.— Kamal Haasan (@ikamalhaasan) May 5, 2020