புது தோசைக்கல்லா? 5 நிமிடம் போதும் இதை பழக்க..!

புது தோசைக்கல் வீட்டில் வாங்கியிருக்கிறீர்களா? அப்போ இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். புது தோசைக்கல்லில் தோசை உடனே வராது. அது பழகிய பிறகே தோசை நன்றாக வரும். அது வரை தோசை ஒழுங்காக வராது. இதை நீக்க 5 நிமிடம் போதும். நீங்கள் வாங்கியிருக்கும் தோசைக்கல் இந்தோனிய கல்லாக இருந்தாலும், அல்லது இரும்புக்கல் ஆக இருந்தாலும் சரி இந்த முறையில் எளிமையாக தோசை அழகாக சுட வைக்க முடியும். முதலில் தோசைக்கல்லை நன்கு சூடு செய்து அதில் 2 ஸ்பூன் அளவு சமையல் எண்ணெய்யை ஊற்றி அதில் 1 டேபிள்ஸ்பூன் கல் உப்பை போடுங்கள்.
பின்னர் கல் உப்பை தோசைக்கல்லில் எல்லா இடங்களிலும் படும்படி வறுக்க வேண்டும். இதனையடுத்து கல் உப்பை மட்டும் அதில் இருந்து எடுத்து விட்டு பாதியாக வெட்டிய ஒரு வெங்காயத்தை எடுத்து அதில் தேய்க்க வேண்டும். பின்னர் மீண்டும் 1 டேபிள்ஸ்பூன் கல் உப்பு போட்டு வறுக்க வேண்டும். தேவைப்பட்டால் எண்ணெய் சேர்த்து கொள்ளலாம். கல் உப்பை வருத்தபிறகு மீண்டும் அதனை எடுத்து விட்டு நறுக்கிய வெங்காயத்தை தேய்க்க வேண்டும். அவ்வளவு தான் உங்கள் தோசை கல் தோசை ஊற்றுவதற்கு தயார். வீட்டில் இருக்கும் தோசைக்கல்லில் கூட தோசை வரவில்லை என்றால் இது போன்று செய்து பாருங்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025