மாதவிடாய் காலத்தில் இந்த உணவுகளை சாப்பிடாமல் இருப்பது நல்லது .!
மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் இயற்கையான உணவுகளை உண்பது உடலுக்கு மிகவும் நல்லது. இந்நிலையில் மாதவிடாய் காலத்தில் சில உணவுகளை பெண்கள் சாப்பிடாமல் இருப்பது மிகவும் நல்லது ஏனென்றால் சில சமயங்களில், மனநிலை சோகம் போன்ற உண்டாக்கலாம்.
எனவே சில உணவுகளை மாதவிடாய் காலத்தில் தவிர்ப்பது நல்லது.மாதவிடாய்க் காலத்தில் எந்த உணவை தவிர்க்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்:
கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் எண்ணெயில் வறுக்கப்பட்ட உணவுகள்.
நன்றாக பொறிக்கப்பட்ட உணவுகளான வெங்காய சிப்ஸ் ,பிரஞ்ச் பிரைஸ் , பேக் செய்யப்பட்ட உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு கோபம், வெறுப்பு ,விரக்தி போன்றவை அதிகம் உண்டாகும். இனிப்பு உணவுகளை எடுத்துக்கொள்வது மாதவிடாய் காலத்தில் இது போன்ற உணர்ச்சிகளை அதிகரிக்கும் எனவே இதுபோன்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது.
காபி , டீ , காஃபின் உள்ள பொருள்கள் , எனர்ஜி கொடுக்கும் பானங்கள், சாக்லேட் போன்றவற்றில் காஃபின் இருப்பதால் இதனை மாதவிடாய் காலத்தில் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இது உங்களுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கும்.
ஆல்கஹால் பருகுவதால் மாதவிடாய் காலத்தில் உள்ள வலியை அதிகரிக்கச் செய்யும். மேலும் ஓய்வு எடுக்க முடியாமல் போகும். இது உடலுக்கு அதிக சோர்வை உண்டாகும்.