இந்தியாவில் உள்ள ஃபோர்டு நிறுவனத்தை கைப்பற்ற டாட்டா மோட்டார்ஸ் பேச்சுவார்த்தை..!

Published by
Edison

ஃபோர்டு நிறுவனத்தின் குஜராத், தமிழ்நாடு யூனிட்களை வாங்க டாட்டா மோட்டார்ஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம், அமெரிக்க கார் நிறுவனமான போர்டு இந்தியாவில் கார்களை தயாரிப்பதை நிறுத்தி,குஜராத் மற்றும் தமிழகத்தில் உள்ள தனது இரண்டு ஆலைகளையும் மூடுவதாக அறிவித்திருந்தது.இதனால்,ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதால்,சென்னை மறைமலை நகரில் உள்ள ஃபோர்டு இந்தியா பிரிவை கையகப்படுத்துவது குறித்து தமிழக அரசு டாட்டா குழுமத்துடன் கலந்துரையாடி வருகிறது.

அந்த வகையில்,டாட்டா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன்,தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மாநில தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோருடன் புதன்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார். உயர்மட்ட பேச்சுவார்த்தைகளின் விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், இரண்டு வார இடைவெளியில் டாட்டா குழும நிர்வாகிகள் முதல்வரை சந்திப்பது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக செப்டம்பர் 27 அன்று டாட்டா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் கிரீஷ் வாக் ஸ்டாலினை சந்தித்தார்.

இந்நிலையில்,உள்நாட்டு ஆட்டோ நிறுவனமான டாடா மோட்டார்ஸ், தமிழ்நாடு மற்றும் குஜராத்தில் உள்ள ஃபோர்டின் அலகுகளை வாங்க ஆரம்ப பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

டாட்டா மோட்டார்ஸ் – ஃபோர்டு ஒப்பந்தம் ஏற்பட்டால், அமெரிக்க வாகன உற்பத்தியாளரிடமிருந்து வாங்கும் இரண்டாவது சொத்து ஆகும்.ஏனெனில், இதற்கு முன்னதாக மார்ச் 2008 இல், டாட்டா குழு ஜாகுவார் லேண்ட் ரோவரை ஃபோர்டில் இருந்து 2.3 பில்லியன் டாலருக்கு வாங்கியது.

ஃபோர்டு தனது நஷ்டத்தில் இருக்கும் இந்திய யூனிட்டை கைவிட்டு, மின்சார மற்றும் தானியங்கி வாகனங்களில் முதலீடுகளை அதிகரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

டாட்டா காட்டிய ருதுராஜ்! பிரித்வி ஷாவுக்கு ஸ்கெட்ச் போட்ட சென்னை?

டாட்டா காட்டிய ருதுராஜ்! பிரித்வி ஷாவுக்கு ஸ்கெட்ச் போட்ட சென்னை?

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…

3 seconds ago

பாஜக மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை! அண்ணாமலை பேச்சு!

சென்னை :  தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…

1 hour ago

RCBvsDC : டாஸ் வென்று டெல்லி பௌலிங் தேர்வு..அதிரடி காட்டுமா பெங்களூர்?

பெங்களூர் : புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும் இன்று…

1 hour ago

ஐபிஎல்லை விட்டு விலகிய ருதுராஜ்! கேப்டனாக களமிறங்கும் தோனி!

சென்னை :  சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக ஐபிஎல் 2025…

2 hours ago

சிஎஸ்கே தொடர் தோல்வி…விமர்சனங்கள் குறித்து மௌனம் கலைத்த அஸ்வின்!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…

3 hours ago

அமித்ஷா வருகை., “அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை.,” அண்ணாமலை பேட்டி!

சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க…

3 hours ago