நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதை விரும்பாத ரஷ்யா,உக்ரனுக்குள் நுழைந்து கடந்த சில தினங்களாக உக்கிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது.குறிப்பாக,தலைநகர் கீவ் மற்றும் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் பகுதியை குறி வைத்து மோசமான தாக்குதலை நடத்தி வருகிறது.
மேலும்,உக்ரைனின் பல பகுதிகளை முழுமையாக ரஷ்ய படைகள் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.
இதனிடையே இரு நாடுகளுக்கும் இடையே பெலாரசில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், தீர்வுகள் ஏதும் எட்டப்படாத நிலையில்,மேலும் இரண்டாவது கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, மனிதாபிமான முறையில் சில நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக முடிவுகள் எடுக்கப்பட்டது.
இதனையடுத்து,உக்ரைனில் உள்ள மக்கள் வெளியேறுவதற்கு வசதியாக தாக்குதலை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்தது. ஆனால்,மறுபுறம் உக்ரைன் மீதான தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.
இந்நிலையில்,இரு நாடுகளுக்கும் இடையே நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்த பேச்சுவார்த்தை மூலமாவது இரு நாடுகளுக்கும் ரஷ்யபோர் முடிவுக்கு வருமா என்று உலக நாடுகள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலியான சம்பவம்…
மதுரை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில், மதுரையில் பேரணி நடத்தப்பட்டது. இதில்…
சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் கடந்த 40 மாதங்களில் 1666 புதிய நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. 2,778 நியாய…
அமெரிக்கா: ஹே சிரி... இதை செய், ஹே சிரி... அதை செய்... என சொல்லலும் ஆப்பிள் சொந்தகாரர்கள் அந்த சாதனத்தில்…
கோவை: கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த 18 டன் எடை கொண்ட எல்பிஜி டேங்கர் லாரி…