அமெரிக்க நாடாளுமன்றத்தில் 164 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த சம்பவம்.! வாழ்த்து தெரிவித்த ஜோ பைடன்.!
அமெரிக்காவில் 164 ஆண்டுகள் கழித்து சபாநாயகரை தேர்ந்தெடுக்க நீண்ட நாட்கள் ஆகியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க நாடாளுமன்றத்தில், அண்மையில் புதிய சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற்றது. அதில், இதுவரை இல்லாத அளவுக்கு பல நாட்கள் பேச்சுவார்த்தை நடைபெற்று 15 சுற்றுகள் வாக்குகள் எண்ணப்பட்டு அதன் பிறகு புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதற்கு முன்னர் 164 ஆண்டுகளுக்கு முன்னர் தான் சபாநாயகரை தேர்ந்தெடுக்க இந்த நீண்ட முறை பயன்படுத்தபட்டது. அதன் பிறகு தற்போது கெவின் மெக்கார்த்தி தான் இவ்வாறு தேர்ந்தெடுக்கபட்டார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட கெவின் மெக்கார்த்திக்கு அதிபர் ஜோ பைடன் தனது வாழ்த்துக்களை கூறினார்.