கலைக்கப்படும் நாடாளுமன்றம்! மீண்டும் தேர்தல்! இது எந்த நாட்டில்?!
இஸ்ரேல் நாட்டில் அண்மையில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்நாட்டில் மொத்தம் 120 நாடாளுமன்ற இடங்கள் இருந்தன. இதில் போட்டியிட்ட கட்சிகளில் பெஞ்சமின் நேதன்யாஹூம் கட்சி 35 இடங்களை கைப்பற்றி இருந்தது. மற்ற எந்த கட்சிகளும் பெரும்பான்மை பெறாததால் கூட்டணி ஆட்சியை ஏற்படுத்த விரும்பினார்.
இதற்கு வலது சாரி கட்சிகளை ஒன்றாக இணைத்து கூட்டணி ஆட்சி அமைக்க பெஞ்சமின் நேதன்யாஹூம்-இன் லிகுட் கட்சி முயன்றது. ஆனால் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு சாதகமாக வாக்களித்ததால் இஸ்ரேல் நாட்டில் மீண்டும் தேர்தல் வரும் சூழல் உருவாகி உள்ளது. ஆதலால் இந்த புதிய தேர்தலானது வருகிற செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
DINASUVADU