இஸ்ரேல் சுகாதார துறை அமைச்சருக்கு கொரோனா உறுதி.! உயர்அதிகாரிகளும் தனிமைப்படுத்தப்பட்டனர்.!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைராஸால் உலகநாடுகளில் பொதுமக்கள், உயர் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றன.
இந்த வைரஸால் தற்போது இஸ்ரேல் சுகாதாரத்துறை அமைச்சர் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அவருடன் வேலைபார்த்து வந்த உயர் அதிகாரிகளும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலில் இதுவரை 6000க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 26 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.