இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 76 பேர் பலி.!
கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது போர் தொடுத்தனர். ஹமாஸ் அமைப்பினர் நடத்திய முதற்கட்ட தாக்குதலில் இஸ்ரேலில் சுமார் 1,400 பேர் உயிரிழந்தனர் என கூறப்பட்டது.
அதனை தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் பதில் தாக்குதலில் இதுவரை 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் காசா நாகரில் இஸ்ரேல் ராணுவத்தினர் தற்போது வரை தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், காசாவில் எங்கும் பாதுகாப்பாக இல்லை என்றும், இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல் மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் தடைகளை உருவாக்குகிறது என்று ஐ.நா தலைவர் மீண்டும் எச்சரித்த ஒரு நாளுக்குப் பிறகு, இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் காசாவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 76 பேர் உயிரிழந்ததாக இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுங்கள் – ஓ.பன்னீர்செல்வம்.!
இதுவரை காசா நகரில் பொதுமக்கள் , ஹமாஸ் அமைப்பினர் என 20,057 பேர் உயிரிழந்தனர் என்றும் அதில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றும் 53,320 பேர் போரில் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.