கொரோனவை தடுக்க இஸ்ரேல் நாட்டு பிரதமரின் அதிரடி முடிவு!

கொரோனாவை தடுக்க நாட்டு மக்கள் அனைவரின் உடலில் எலக்ட்ரானிக் சிப் பொருத்தப்படும் என்று இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் மிக தீவிரமாக இறங்கியுள்ளது. இதுவரை உலக அளவில், 4,429,235 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 298,165 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், அனைத்து நாடுகளும் பல விதத்தில் போராடி வருகிற நிலையில், கொரோனாவை தடுக்க நாட்டு மக்கள் அனைவரின் உடலில் எலக்ட்ரானிக் சிப் பொருத்தப்படும் என்றும், இதன் மூலம் கொரோனா நோயாளிகள் பக்கத்தில்வந்தால் எச்சரிக்கை செய்யப்படும் என்றும், இஸ்ரேலிய நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இவரது இந்த செயல் தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாக பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது.