உக்ரைன் அதிபருடன் தொலைபேசியில் பேசிய இஸ்ரேல் பிரதமர்…!
இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னட் உக்ரைனின் தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியிடம் கேட்டறிந்துள்ளார்.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரின் 7-வது நாள் இன்றும் போர் நடைபெற்று வருகிறது. உக்ரைன் கார்கிவ் நகரில் ரஷ்யா ஆயுதம் ஏந்திய வாகனங்கள் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைனை சார்ந்தவர்கள் இதுவரை, 6,60,000 க்கும் அதிகமானோர் வேறு நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். அண்டை நாடான போலந்தில் மட்டும் 400,000 பேர் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு 2000க்கும் மேற்பட்ட உக்ரேனிய பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரேனிய அவசர சேவை மையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னட் உக்ரைனின் தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியிடம் கேட்டறிந்துள்ளார். இதுகுறித்து உக்ரைன் அதிபர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Had a phone conversation with ???????? Prime Minister @naftalibennett about Russian aggression.
— Володимир Зеленський (@ZelenskyyUa) March 2, 2022