இஸ்ரேல்:டெல் அவிவ் நகரின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 பேர் உயிரிழப்பு.
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரின் மையப்பகுதியில் பார்கள் மற்றும் உணவகங்களுக்கு பெயர் பெற்ற பரபரப்பான தெருக்களில் ஒன்றான டிசென்காஃப் தெருவில் பல பல இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் எட்டு பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.இதனையடுத்து, காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து,துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவரை போலீசார் கைது செய்தனர் மற்றும் மற்றொருவரை தேடி வருகின்றனர். மேலும்,துப்பாக்கிச் சூடு காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவுவதால் மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு போலீசார் கூறியுள்ளனர். இதனிடையே,இஸ்ரேலிய காவல்துறை, ராணுவ சிறப்புப் படைகள் மற்றும் ஷின் பெட் உளவுத்துறையைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்டோர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டிற்கான உண்மையான காரணம் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.இது பாலஸ்தீனியர்களின் தாக்குதலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.ஏற்கனவே,கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பாலஸ்தீனியர்கள் நடத்திய தொடர் தாக்குதல்களில் சுமார் 11 பேர் கொல்லப்பட்ட நிலையில்,மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் இரன்று பேர் கொள்ளப்பட்டுள்ளதால் டெல் அவிவ் நகரில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள்…
வாஷிங்டன் : அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமான ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸின் ப்ளூ கோஸ்ட் மிஷன் 1 கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்…
ஹைதராபாத் : தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக வலம் வந்த கல்பனா அளவுக்கு அதிகமான…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்ரேலியா அணியை வீழ்த்தி…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் காட்டில் மழை தான் என்கிற வகையில், அவருடைய படங்கள் தொடர்ச்சியாக ஹிட் ஆகி கொண்டு வருகிறது.…
சென்னை : சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே புதிய வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், இதற்கு இடையிலான…