ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவோர்வ், ஹிட்லரின் உடலிலும் யூத இன ரத்தம் கலந்திருக்கலாம் எனபேசியது பெரும் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
கடந்த அறுபது நாட்களுக்கும் மேலாக உக்ரைன்-ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் கடுமையாக போரிட்டு வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவோர்வ் பேசியது ஒரு புதிய சர்ச்சையில் அவரை தள்ளியுள்ளது. ரஷ்யா பல வருடங்களாகவே உக்ரைன் அதிபரான விளாடிமிர் ஜெலன்ஸ்கியின் ஆட்சியை குறித்து ஹிட்லரின் ஆட்சியோடு ஒப்பிட்டு பேசி வருகிறது. இந்த நிலையில் இது குறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி இத்தாலிய ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளதாவது, நான் கூறுவது சரியா என்று தெரியவில்லை.
ஹிட்லரின் ரத்தத்திலும் யூத இனம் கலந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறியுள்ளார். இதன் காரணத்தினால் தற்போது யூதர்கள் அதிகம் இருக்க கூடிய நாடான இஸ்ரேல் கோபத்தில் இருக்கிறது. இதுவரை நடந்து வந்த போர் காலங்களில் இஸ்ரேல் அரசு ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே சமாதானமாக பேசி வந்தது. தற்போது ஹிட்லரை யூதர்களோடு தொடர்பு படுத்தி ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி பேசியது யூதர்களை அவமதிக்கும் செயலாகும் என்று இஸ்ரேல் வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.
ஹிட்லரின் ஆதரவாளர்கள் முன்பிலிருந்தே தெரிவித்துவந்ததாவது, யூதர்கள் அவர்களுக்குள் நடந்த உள்நாட்டு பிரச்சனை காரணத்தினால் தான் அவர்கள் அதிகமாக மரணமடைந்தார்கள் என்று விமர்சனம் செய்து வந்தது. இதனை ஏற்கும் வகையில் தற்போது செர்ஜி தெரிவித்துள்ளதாவது யூதர்களை அவமதிக்கும் செயல் என்று இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் யய்ர் லேப்பிட் தெரிவித்துள்ளார். இதுபற்றி சரியான விளக்கம் செர்ஜி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஹைதராபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடி ஹைதராபாத் அணிக்கு என்ன தான் ஆச்சு என்கிற கேள்விகளை கேட்டவர்கள் அனைவர்க்கும்…
சென்னை : கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியீட்டு இருந்தார்.…
சென்னை : அஜித் ரசிகர்கள் பலரும் அவரிடம் எதிர்பார்க்கும் படங்கள் என்றால் மாஸான படங்கள் என்று சொல்லலாம். அப்படி எதிர்பார்த்த ரசிகர்களுக்காகவே…
ஹைதராபாத் : நீங்க மட்டும் தான் அதிரடியா பேட்டிங் செய்வீர்களா? என்பது போல ஹைதராபாத் அணிக்கே அதிரடி காட்டும் வகையில்…
டெல்லி : உலகம் முழுவதும் உள்ள பல வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் சேவை தடைபட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக, சிலருக்கு…
லக்னோ : ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்கிற சாதனையை ரிஷப் பண்ட் படைத்திருந்தார். லக்னோ அணி…