தீ பிடிக்கும் வகையிலான பலுன்களை ஹமாஸ் அமைப்பினர் பறக்கவிட்டதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா மீது வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேலில் பெஞ்சமின் நெதன்யாஹு அவர்களின் ஆட்சி நடைபெற்ற காலகட்டத்தில் இஸ்ரேல் மற்றும் காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் இடையே அடிக்கடி வான்வெளி தாக்குதல் மற்றும் பயங்கரவாத மோதல்கள் தொடர்ந்து கொண்டிருந்தது. இருப்பினும் கடந்த மாத இறுதியிலேயே சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்று இவர்களுக்கிடையேயான மோதல் முடிவுக்கு வந்தது. தற்போது இஸ்ரேலில் புதிய கூட்டணி அரசாங்கம் ஆட்சியை பிடித்துள்ளது. பெஞ்சமின் நெதன்யாகு ஆட்சி முடிவுக்கு வந்துள்ளதுடன், நாப்தலி பென்னட் அவர்கள் இஸ்ரேலின் புதிய பிரதமராக ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ளார்.
இந்நிலையில், மீண்டும் இஸ்ரேலிய படைகள் காசா பகுதியில் வான்வழித் தாக்குதல் நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், காசாவில் வான்வழி தாக்குதல் நடத்தியதை ஒப்புக்கொண்டுள்ள இஸ்ரேல் ராணுவம் தெற்கு இஸ்ரேல் பகுதிகளில் தீ பிடிக்கும் வகையிலான பலூன்களை பறக்கவிட்டதாகவும், அதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் காசா தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹோபார்ட் : விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மகளிர் பிக்பாஷ் தொடரில் இன்று ஹோபார்ட் அணியும், அடிலெய்டு அணியும் மோதியது. இந்த…
சென்னை : கிண்டி மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவரான பாலாஜியை ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : 'அமரன்' திரைப்படம் வெளியாகி 12 நாள்களில் ரூ.250 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதன்மூலம், 250 கோடி…
கொல்கத்தா : நடந்த முடிந்த ஐபிஎல் தொடரில் 15 போட்டிகளில் 370 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணிக்காகச் சிறப்பாக விளையாடிய…
பருவகால சூழ்நிலைகள் மாறும் போது எளிதில் தாக்கும் காய்ச்சலில் இருந்து விடுபட சாப்பிட வேண்டிய உணவு முறைகளை இந்த செய்தி…
கோவை : தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தன்னுடைய கட்சியின் முதல் மாநாட்டை விக்ரவாண்டியில் கடந்த மாதம் நடத்தியபோது அதில்…