கொரோனாவில் இருந்து தப்பிக்க தனித்தீவு! ஐரோப்பிய பணக்காரரின் அதிரடி முயற்சி!

கொரோனாவில் இருந்து தப்பிக்க தனித்தீவினை வாங்கிய ஐரோப்பிய பணக்காரர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த கொரோனா வைரசின் ஆக்கிரமிப்பு உலகத்தையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், ஐரோப்பிய பானாக்காரர் ஒருவர் ரூ.47 கோடியில், கொரோனாவில் இருந்து தன்னை காத்துக் கொள்ள, அயர்லாந்தில் தனித்தீவு ஒன்றை வாங்கியுள்ளார். இந்த தீவானது 157 எக்காரி, ஆள்நடமாட்டமில்லாமல், ஒரே ஒரு வீடு, படகு வசதி, ஹெலிபேட், விளையாட்டு மைதானம், உடற்பயிற்சி கூடம், குடிநீர் வசதி என அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.