#BREAKING:ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டார் – ஜோ பைடன்..!

நேற்றிரவு வடமேற்கு சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிமை அமெரிக்க இராணுவம் கொன்றது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ட்வீட் செய்துள்ளார்.
நேற்று அமெரிக்க இராணுவப் படைகளுக்கும், வடமேற்கு சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கும் இடையிலான போர் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நேற்று இரவு எனது அறிவுறுத்தலின் பேரில், வடமேற்கு சிரியாவில் அமெரிக்க இராணுவப் படைகள் அமெரிக்க மக்களையும், நமது நட்பு நாடுகளையும் பாதுகாக்கவும் உலகை பாதுகாப்பான இடமாக மாற்றவும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்தின.
ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு எதிராக மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளோம். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிமை அமெரிக்க இராணுவம் கொன்றது. எங்கள் படைகளின் திறமை மற்றும் துணிச்சலுக்கு நன்றி என தெரிவித்தார்.
Last night at my direction, U.S. military forces successfully undertook a counterterrorism operation. Thanks to the bravery of our Armed Forces, we have removed from the battlefield Abu Ibrahim al-Hashimi al-Qurayshi — the leader of ISIS.
https://t.co/lsYQHE9lR9— President Biden (@POTUS) February 3, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
AFG vs AUS : அரையிறுதிக்கு செல்லப்போவது யார்? டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு.!
February 28, 2025
”என்னமோ நான் வயசுக்கு வந்த புள்ளைய கற்பழிச்சு விட்ட மாதிரி பேசுறீங்க ” – சீமான் சர்ச்சைப் பேச்சு.!
February 28, 2025