உலகை தற்போது கொரோனா அச்சுறுத்தி வருகிறது. இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல நாடுகள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன.கொரோனாவிடம் பல நாடுகளின் முக்கிய தலைவர்கள் சிக்கி கொண்டனர்.
அவர்களில் ஈரான் துணை அதிபர் மசூமே எப்டேகர், இங்கிலாந்து சுகாதாரத்துறை மந்திரி நாடின் டோரிஸ், கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மனைவி சோபி கிரேகோயர் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் டேவிட் கெல்லர்மேன் என்பவருடைய 8 வயது மகன் கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.அதில் , உங்களது மனைவி நலமாக இருப்பதாக நான் நம்புகிறேன். அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பதைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். கொரோனா வைரஸ் பற்றி நான் உங்களிடம் இரண்டு கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன் என எழுதி இருந்தான்.
கனடாவில் உள்ள அனைத்து மக்களும் நோய் வாய்ப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதா..? வைரஸில் இருந்து விலகி இருப்பதை உறுதிப்படுத்த நீங்கள் என்ன செய்கிறீர்கள்..? என எழுதியுள்ளான்.
இதையெடுத்து அந்த சிறுவனின் கடிதத்திற்கு ட்விட்டர் மூலம் பதிலளித்துள்ளார். அதில் ,உங்கள் கடிதத்திற்கு நன்றி மைக்கேல். சோபி கிரேகோயர் நன்றாக உள்ளார். கொரோனா பரவலைக் குறைப்பதற்கும் ,அனைத்து குடிமக்களும் பாதுகாப்பாக வைத்திருக்க நாங்கள் பல முயற்சி செய்து வருகிறோம் என கூறினார்.
மேலும் அனைவரும் செய்யக்கூடிய விஷயங்கள் சில உள்ளன. இதை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கைகளை அடிக்கடி கழுவுங்கள் ,முழங்கையில் வைத்து இருமல் செய்யுங்கள்.
கூட்டமாக வெளியே செல்வதை தவிர்க்கவும் அதற்கு பதிலாக தொலைப்பேசியில் நண்பர்களிடம் பேசுங்கள் என கொரோனா குறித்து சில அறிவுரைகளை வழங்கினார்.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…