உங்க அப்பா சர்க்கரை நோயாளியா…? காலையில் இந்த உணவை செய்து குடுங்க…!

Default Image

தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலும் 40 வயதை கடந்து விட்ட பலருக்கு நீரிழிவு நோய் உள்ளது. நீரிழிவு எனப்படும் இந்த சர்க்கரை நோயின் பாதிப்பு தற்பொழுது பலருக்கும் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. இதற்கான மருந்துகள் ஒருபுறம் எடுத்து வந்தாலும், நம் வீட்டிலேயே நீரிழிவு நோயை சரி செய்வதற்கான உணவு முறைகளை வழக்கமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இன்று உங்கள் அன்புக்குரியவர்கள் அல்லது அப்பா, பாட்டி, தாத்தா யாராயிருந்தாலும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்கள் என்றால் அவர்களுக்கான அட்டகாசமான ஒரு காலை உணவு குறித்து பார்க்கலாம். ஓட்ஸ் என்பது பலராலும் உடல் எடை குறைக்க விரும்பி உண்ணப்பட கூடிய ஒரு டயட் உணவாக இருக்கிறது. இது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பெரும் நன்மை பயக்கிறது. இதில் எப்படி இட்லி செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

  • ஓட்ஸ்
  • தயிர்
  • ரவை
  • பச்சை மிளகாய்
  • கொத்தமல்லி
  • கேரட்
  • பேக்கிங் சோடா
  • உப்பு

செய்முறை

முதலில் கடாயில் ஓட்ஸை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன் பின்னதாக ஓட்ஸ் சூடு தணிந்ததும், மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். பின்பு மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கடலைப்பருப்பு சேர்த்து தாளித்து கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். இவை பொன்னிறமாக வந்ததும் சிறிது ரவையைக் கொட்டிக் கிளறி, பின் அதில் அரைத்து வைத்துள்ள ஓட்ஸை போட்டு 5 நிமிடம் நன்கு கிளறி கொண்டே இருக்க வேண்டும்.

அதன்பின் மற்றொரு பாத்திரத்தில் இதை கொட்டி அதனுடன் கொத்தமல்லி, உப்பு, பேக்கிங் சோடா, தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். இட்லி மாவு பதத்திற்கு இதை தயார் செய்து கொண்டு, இட்லி குக்கர் தட்டில் எண்ணெய் தடவி மாவை ஊற்றி 15 நிமிடம் கழித்து இட்லி வெந்ததும் இறக்கி விட வேண்டும். அட்டகாசமான இட்லி ஓட்ஸ் தயார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

PM Modi - Pakistan PM
Indian BSF PK Singh arrested by Pakistan Army
india vs pakistan war
Indian Navy test-fires missile
Indian PM and Pakistan PM
Pahalgam Attack Victim son