உங்களது உடல் எப்போதும் சூடாகவே உள்ளதா..? சூட்டை தணிக்க சூப்பர் டிப்ஸ்…!
- உடல் வெப்பத்தை குறைக்க என்ன செய்யா வேண்டும்?
நமது உடல் எப்போதுமே சரியான அளவு வெப்பநிலையை கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு உடலின் வெப்பநிலை கூடினாலோ அல்லது குறைந்தாலோ நமது உடலில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. கோடைகாலங்களில் அதிகமாக உடலின் சூடு அதிகரிக்கும். இதனால் பலருக்கும் அடிக்கடி சூடு பிடிப்பது போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதுண்டு.
இவ்வாறு உடலின் வெப்பம் அதிகரிக்கும் போது வயிற்றுவலி, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், கண் எரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இந்த உடல் சூட்டை தணிக்க என்ன செய்யலாம் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
உடல் சூட்டை தணிக்க வைட்டமின் சி நிறைந்த உணவுப் பொருட்களான ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றை உட்கொள்ள வேண்டும். இப்பழங்களை அடிக்கடி ஜூஸ் போட்டு குடித்து வந்தால் உடலின் வெப்பத்தை குறைக்கலாம்.
ஒரு அகலமான பாத்திரத்தில் குளிர்ந்த நீரை நிரப்பிக் கொள்ள வேண்டும். பின் அதில் கால்களை ஊற வைக்க வேண்டும். அவ்வாறு ஊற வைப்பதன் மூலம் உடலில் உள்ள சூடு தணிந்துவிடும்.
தண்ணீர் குடிப்பது ஒரு மனிதனுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். ஒரு மனிதன் ஒரு நாளில் குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அப்படி குடிக்கவில்லை என்றால் நமது உடலில் பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும். தண்ணீர் குடிப்பது குறைவு பட்டாலும் நமது உடலின் வெப்பம் அதிகரிக்கும் .எனவே உடலின் வெப்பத்தை தணிக்க தண்ணீர் குடிப்பதை அதிகரிக்க வேண்டும்.
உடல் வெப்பம் அதிகமாக உள்ளவர்கள், அதிகாலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெந்தயத்தை ஒரு ஸ்பூன் எடுத்து, வாயில் போட்டு தண்ணீரில் விழுங்கி வேண்டும்.இவ்வாறு செய்து வந்தால் உடல் வெப்பத்தைக் குறைக்கலாம்.