வீட்டில் செல்வம் பெருகணுமா.? அப்போ சமையலறையில் இந்த மாற்றத்தை கொண்டு வாங்கப்பா.!
நம்முடைய வீட்டின் சமையலறை சமையலறை சுக்கிரனின் காரகத்துவம் கொண்டது. சுக்கிரனுடன் எந்த கிரகம் சேர்ந்தால் செல்வம் பெருகும் என்பதை பார்க்கலாம்.
நமது வீட்டின் சமையல் அறையை நன்றாக வைத்திருந்தலே செல்வம் தானாக சேறுமாம். செல்வத்தை பெருக்குவதில் அஞ்சறைப்பெட்டியின் பங்கும் அதிகம் உள்ளது. அஞ்சறைப்பெட்டியில் பொருட்களை குறைவில்லாது வைத்திருந்தாலே சகல ஐஸ்வர்யங்களும் வீடு தேடி வரும்.
பஞ்ச பூதங்களும் ஆட்சி செய்யும் இடம் சமையலறை தான். அதிலும் நெருப்பு அதிகம் புழங்கும் இடம், அந்த இடத்தில் காற்றும் தண்ணீரும் குறைவாக இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த வீட்டில் சகல செல்வங்களும் ஐஸ்வர்யங்களும் பெருகுமாம். பண்டைய கால வீடுகளில் சமையலறை பெரியதாக இருக்கும். ஒருபக்கம் அமர்ந்து காய் வெட்டுவார்கள்,மறுபக்கம் சமையல் செய்வார்கள்.
இப்போ உள்ள காலத்தில் சமையல் அறை சின்னதாகி விட்டது. அக்னி மூலை சமையலறை தென்கிழக்கு மூலையில் சரியாக அக்னி மூலையில் அமைந்தாலே பாதி கிடைக்கும். நிறைய வீடுகளில் அக்னி மூலையில் சமையல் அறை கேட்ட முடியாமல் வாயு மூலையான வடமேற்கு மூலையில் சமையல் அறை அமைந்து விடும்.
அந்த நேரங்களில் தென் கிழக்கு பகுதியில் கிழக்கு பார்த்து நின்று சமைப்பது போல அமைப்பது நன்று. பாத்திரம் விலக்கும் சிங்க் வடகிழக்கு பகுதியில் அமைக்க வேண்டுமாம். சமையலறை சுத்தமாக
இருக்க வேண்டும், அதிக ஈரமில்லாமல் உலர்வாக இருந்தால் மட்டுமே சமையலறையில் சுக்கிரனின் காரகத்துவம் அதிகம் இருக்கும்.சமையலறையில் அதிமாக தண்ணீர் பயன்படுத்தினால் அந்த வீட்டில் செல்வம் குறைந்துவிடுமாம். அதனால்தான் தண்ணீரை தங்கம் போல கஞ்சத்தனமாக பயன்படுத்த வேண்டும் என்று பெரியவர்கள் அடிக்கடி சொல்வார்கள்.
சுக்கிரனும் சந்திரனும் அதிகம் சேரக்கூடாது, அக்னி அதிகமாக இருக்கும் இடமான சமையல் அறையில் தண்ணீர் அதிகம் இருக்க கூடாது என்று கூறுகிறார்கள். அதனால் தான் பண்டைய காலத்தில் கொல்லைப்புறத்தில் பாத்திரம் விலக்கினார்கள். இப்போது அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு கொல்லைப்புறம் எங்கே இருக்கப் என்றே தெரியவில்லை. எனவே இப்போது இருக்கும் கிச்சனிலேயே சில மாற்றங்களை செய்து கொள்வது அவசியமாகும்.
நமது சமையல் அறையில் அரிசி, பருப்பு நவதானியங்களை எல்லா நேரத்திலும் நிறைவாக வைத்திருக்க வேண்டும். வடகிழக்கு மூலையில் ஒரு கிண்ணத்தில் வெந்தயத்தையோ, நவதானியத்தையோ போட்டு திறந்த நிலையில் வைத்திருக்க வேண்மாம். மளிகைப் பொருட்களும் எண்ணெய் வகைகளும் குறைவின்றி இருந்தாலே செல்வம் பெருகும்.