கொரோனாவால் பாதிக்கப்பட்டாரா விஷால்.?

சில தினங்களுக்கு முன்பு விஷால் மற்றும் அவரது தந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தற்போது ஆயுர்வேத மருத்துவத்தின் உதவியால் மீண்டு வந்ததாக கூறப்படுகிறது.
விஷால் அவர்கள் தற்போது நடித்து வரும் திரைப்படத்தில் ஒன்று துப்பறிவாளன் 2. சமீபத்தில் இயக்குநர் மிஷ்கின் மற்றும் விஷாலுக்கும் இடையில் நிலவி வந்த பிரச்சினைகளால் மிஷ்கின் இதிலிருந்து விலகினார். அதனையடுத்து அந்த படத்தை விஷால் அவர்களே இயக்கி, தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்து நடிப்பதாக கூறப்படுகிறது . மேலும் மருது படத்தை இயக்கிய எம். முத்தையா அவர்கள் இயக்கும் ஒரு படத்திலும் கமிட்டாகியுள்ளார். மேலும் இவர் எம். எஸ். ஆனந்த் இயக்கத்தில் “சக்ரா” என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 15/20 நாட்களுக்கு முன்பு விஷால் மற்றும் அவரது தந்தை ஜி. கே. ரெட்டிக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாம். முதலில் விஷாலின் தந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவரிடமிருந்து விஷாலுக்கும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டு தற்போது கொரோனாவிலிருந்து மீண்டு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025
நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!
March 12, 2025
அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?
March 12, 2025