ஓடிடி தளத்திற்காக உருவாக்கப்படும் வெப் சீரிஸ் ஒன்றில் நடிகர் விக்ரம் அவர்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
நடிகர் விக்ரம் தற்போது கோப்ரா, துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் மணிரத்னம் அவர்களின் பொன்னியின் செல்வன் படத்திலும், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மகனுடன் இணைந்து ஒரு படத்திலும் கமிட்டாகியுள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக பலர் ஓடிடி பக்கம் சென்று விட்டனர்.
ஏற்கனவே முன்னணி இயக்குநர்கள் பலர் இணைந்து ஓடிடி பிளாட்பாரத்திற்காக ஆந்தலாஜி திரைப்படத்தை இயக்க போவதாகவும், அதில் முன்னணி நடிகர், நடிகைகள் நடிப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது நடிகர் விக்ரம் அவர்களை பிரபல ஓடிடி தளத்திற்காக உருவாகும் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அளவில் அனைத்து ரசிகர்களையும் கவரும் வகையில் இந்த வெப் சீரிஸை உருவாக்க போகிறார்களாம். இதில் விக்ரம் நடிக்கிறாரா இல்லையா என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் தெரிய வரும்.
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இன்று…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பை வழங்குவதாக…
கோவை : அண்மைக்காலமாக தெருநாய் கடிபற்றிய செய்திகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை…
சான் பிரான்சிஸ்கோ : பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் இருந்து…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா - பெசாவருக்கு ஜாபர் விரைவு ரயில் 450 பேருடன் சென்றது.…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…