விஜய்யின் மகன் படத்தை மாஸ்டர் தயாரிப்பாளர் தயாரிக்கிறாரா.?

Default Image

விஜய் அவர்களின் சஞ்சய் அறிமுகமாகும் படத்தை நான் தயாரிக்கவுள்ளதாக வெளியான தகவல் முற்றிலும் வதந்தி என்று சேவியர் பிரிட்டோ கூறியுள்ளார்.

விஜய் அவர்கள் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தை விஜய்யின் நெருங்கிய உறவினரும், தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். இந்த படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சமீபத்தில் விஜய்யின் மகன் சஞ்சய் அறிமுகமாகும் படத்தை சேவியர் பிரிட்டோ தான் தயாரிக்க உள்ளதாக சில தகவல்கள் கசிந்திருந்தது.

இது குறித்து சேவியர் பிரிட்டோ சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார். அதில் விஜய் மகன் சஞ்சய்க்கு இயக்குநர் ஆவதில் தான் அதிக ஆர்வம், ஹீரோவாக நடிப்பது குறித்து அவருக்கு ஆர்வம் இருக்கிறதா, இல்லையா என்பது தனக்கு தெரியாது. தற்போது கன்னடாவில் படித்து வரும் அவர், படித்து முடித்த பிறகு எந்த துறையை தேர்ந்தெடுக்கிறார் என்பதை பொறுத்து தான் முடிவு எடுக்க முடியும். மேலும் சஞ்சய் படத்தை நான் தயாரிப்பதாக வெளியான தகவல் முற்றிலும் வதந்தி என்றும், விஜய் அவர்களிடம் நான் இது குறித்து பேசியதே இல்லை என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்