திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில் OTT-யில் ‘மாஸ்டர்’ படத்தை வெளியிட படக்குழு முடிவு என தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சமீபத்தில் சூர்யாவின் சூரரை போற்று படத்தினை ஓடிடியில் வெளியிடவுள்ளதாக அறிவித்ததை தொடர்ந்து மாஸ்டர் படமும் ஓடிடியில் ரிலீஸ் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவியது.
அந்த வகையில் அண்மையில், மாஸ்டர் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக வெளியாவதாக தகவலைகள் வெளியாகியது. மேலும் தளபதி விஜயின் அடுத்த படத்தின் அப்டேட்டும் அந்த தினத்தில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியானது. ஆனால் மாஸ்டர் படம் குறித்து அப்போ..அப்போ சில வதந்திகளும் எழுந்த வண்ணம் உள்ளது.
இதற்கிடையில், கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், இது குறித்து மத்திய அரசு கடந்த 8-ந்தேதி காணொலி காட்சி மூலமாக திரையரங்கு உரிமையாளர்களிடம் திரையரங்கு திறப்பது பற்றி ஆலோசனை நடத்தியது. திரையரங்கு திறப்பது பற்றி மத்திய அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகள் வழங்கியது. அதன்படி, திறந்த வெளியில் திரையிட அரசு அனுமதி அளித்தது.
தற்போது கொரோண காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில் OTT-யில் ‘மாஸ்டர்’ படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த வித அறிவிப்புகளும் இன்னும் வெளிவரவில்லை. தற்போது OTT-யில் ‘மாஸ்டர்’ படத்தை வெளியிடப்படும் என தகவல் அறிந்ததையடுத்து விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
சென்னை : கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (நவம்பர் 16) சர்வதேச கருத்தரங்கு ஒன்று நடைபெற உள்ளது. இதில்…
தென்னாபிரிக்கா : இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி தொடரை…
நெல்லை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம் வெளியாகி 3-வது வாரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்கு…
சென்னை : இன்று கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரத…
சென்னை : இளம் தமிழ் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார். உடல் நலம் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று (வெள்ளிக்கிழமை)…
சென்னை : தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது.…