தமிழில் உருவாகிறதா விஜய் சேதுபதியின் முதல் மலையாள படம்.?

Default Image

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான முதல் மலையாள திரைப்படம் மார்கோனி மத்தாய் தமிழில் உருவாக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்தாண்டு வெளியான ‘மார்கோனி மத்தாய்’ என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார் விஜய் சேதுபதி. சனில் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் ஜெயராம், பூர்ணா, ஆத்மியா உள்ளிட்ட பலர் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்த படத்தின் தமிழ் டப்பிங் உரிமையை ராசி மீடியா தயாரிப்பாளர்கள் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் தமிழ் பதிப்பிற்கு விஜய் சேதுபதி டப்பிங் செய்ய மாட்டாராம். மேலும் இதன் தயாரிப்பாளர்கள் இதனை நேரடி தமிழ் படம் என்று கூறி வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் விஜய் சேதுபதி கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் தமிழ் பதிப்பிலும் ஜெயராம் மற்றும் பூர்ணா முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். விரைவில் இதனை குறித்த கூடுதல் விவரங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்