சிம்புவிற்கு வில்லனாகும் விஜய்சேதுபதி.?

சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு, இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் படத்தில் நடிக்கவுள்ளார். படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் நடைபெறவுள்ளது.
இந்த படத்தை தயாரிப்பாளர் ஐசரி கணேசன் வேல்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
படத்தில் ஏற்கனவே பஹத் பாசில் வில்லனாக நடிக்க ஒப்பநத்தம் செய்யப்பட்டுள்ளார். இதனால் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப் படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
“தோனியால் 10 ஓவர்கள் களத்தில் நின்று விளையாட முடியாது” – சிஎஸ்கே பயிற்சியாளர் ஓபன் டாக்.!
March 31, 2025
“விஜய் திமுகவுக்கு எதிரி., நான் அவருக்கு எதிரி., எது வந்தாலும் பாத்துக்கலாம்..,” பவர் ஸ்டார் பளீச்!
March 31, 2025