விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தை தேசிய விருது பெற்ற இயக்குநரான பிரியா கிருஷ்ணாசாமி இயக்குவதாக கூறப்படுகிறது.
நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தற்போது தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி ஆகிய மூன்று படங்களில் கமிட்டாகியுள்ளார்.சமீபத்தில் இவர் மெகா ஹிட் படமான பிச்சைக்காரன் படத்தின் கதையை எழுதி முடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியது. 2016ல் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து தயாரித்த திரைப்படம் தான் பிச்சைக்காரன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் பிறந்தநாளான ஜூலை 24 அன்று அவரது அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் போஸ்ட்ர் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் இவரது அடுத்த படம் பிச்சைக்காரன் 2 ஆக இருக்க கூடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இவரது அடுத்த படத்தினை தேசிய விருது பெற்ற இயக்குநர் ஒருவர் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், பிரியா கிருஷ்ணாசாமி என்பவர் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் 2018ல் ‘பாரம்’ என்ற திரைப்படத்திற்கு தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி உண்மையா என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் தெரிய வரும்.
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…
தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…
தூத்துக்குடி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று நாளையும் தூத்துக்குடியில் மினி டைடல் பார்க் திறப்பு விழா, திமுக நிர்வாகிகள்…