வலிமை திரைப்படம் ஓடிடியில் வெளியாகிவுள்ளதாக பரவும் வதந்திக்கு தயாரிப்பாளர் போனிகபூர் விளக்கம் அளித்துள்ளார்.
இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் வலிமை . இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வலிமை திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 1 ஆம் தேதி வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்திருந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருவதால் வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஒத்திவைப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், வலிமை திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியானதை தொடர்ந்து இதற்கு விளக்கம் அளித்த வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் ” அஜித் படங்களை எப்படி ஓடிடியில் வெளியீடுவது..?? அவர் திரைப்படங்கள் திரையரங்குகளில் தான் வெளியாகவேண்டும். அணைத்து கொரோனா பிரச்சனை முடிந்த பிறகு படம் திரையரங்குகளில் தான் வெளியாகும்” என்று கூறியுள்ளார்.
மேலும் வலிமை படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு மீதமுள்ள நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக படத்திற்கான படப்பிடிப்பு தள்ளி செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வலிமை திரைப்படம் வருகின்ற தீபாவளி அன்று வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால…
அமராவதி : ஆந்திர பிரதேச துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சித் தலைவருமான நடிகர் பவன் கல்யாண் இளைய மகன் மார்க்…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை உயர்த்தும் பொருட்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
திருநெல்வேலி : நெல்லையில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, வான்கடே மைதானத்தில் விராட் கோலி ஆல்…