செல்வராகவனின் நியூ தெறி லுக்.! பீஸ்ட் படத்தின் கெட்டப் இதுதானா.?

இயக்குனர் செல்வராகவனின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் – நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் “பீஸ்ட்“. இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு, விடிவி கணேஷ், ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில், படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் செல்வராகவனின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். விரைவில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.