மாஸ்டர் ஹிந்தி ரீமேக்கில் இருந்து நடிகர் சல்மான் கான் விலகியுள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் மாஸ்டர்.திரையரங்கில் 50% இருக்கைகளுடன் வெளியான இப்படம் ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியடைந்தது மாபெரும் வசூல் சாதனை செய்தது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மளவிகா மோகனன் நடித்திருந்தார்.
இந்த படத்தில் சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன், மகேந்திரன், தீனா போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படத்தை சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரிக்க இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாகவும், அதில் விஜய் நடித்த கதாபாத்திரத்தில் சல்மான் கான் நடிக்கவிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி பரவி வந்தது. இதனையடுத்து, தற்போது கிடைத்த தகவலின் படி, மாஸ்டர் படத்தின் கதையை இந்திக்கு ஏற்றவகையில் மாற்றினால் மட்டுமே சல்மான் கான் நடிக்க சம்மதம் தெரிவித்து இருந்தாகவும், தற்போது அவருக்கு ஏற்றவகையில் மாற்றியமைக்கப்பட்ட கதை கேட்ட சல்மான் கானுக்கு திருப்தியாக இல்லை என்பதால் இதிலிருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது.
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…