இவ்வோளோ பாசமா? மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்காக பிரபல இயக்குனர் செய்த செயல்!

Published by
லீனா
  • மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்காக பிரபல இயக்குனர் செய்த செயல்.
  • சேதுவின் நற்குணத்தையும், செய்து வரும் நற்காரியங்களை நினைத்ததும் வரிகள் உள்ளத்தில் நெகிழ்ந்து அன்பாக நேசமாக கண நேரத்தில் வந்தது.

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருகிறார். இவர் சினிமாவில் மட்டுமே தனது கவனத்தை செலுத்தாமல், சமூக அக்கறை கொண்டவராக வளம் வருகிறார். இதனால் தான் இவர் மக்கள் செல்வன் என்று அழைக்கப்படுகிறார். இவர் தற்போது தளபதி விஜயின் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாள் பரிசாக, அவரை வாழ்த்தி இயக்குநர் சீனு ராமசாமி எழுதிய கவிதை பாடலாக பதிவாகியுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் இதை எழுத பத்தாண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. ஆனால்எ ழுதியது என்னவோ அரை மணி நேரத்தில். சேதுவின் நற்குணத்தையும், செய்து வரும் நற்காரியங்களை நினைத்ததும் வரிகள் உள்ளத்தில் நெகிழ்ந்து அன்பாக நேசமாக கண நேரத்தில் வந்தது” என்று கூறியுள்ளார்.

இதோ அந்த கவிதை,

ரசிகனை ரசிக்கும்
ரசிகனே வாரசித்தவர் மனங்களின்
தலைவனே வா
இலக்கணம் எமக்கில்லை
என்றவன் வா
தலைக்கணம் தமக்கில்லை
உணர்ந்தவன் வா

மக்கள் செல்வா
உந்தன் மங்காதப் புகழ் சொல்லவா
மக்கள் செல்வா
இந்த மண்ணின் மகன் நீ அல்லவா

தர்மத்தின் தலைமகன்
தந்ததை மறப்பவன்
பெற்றதை நினைப்பவன்
பெருமைகள் சேர்ப்பவன்

பசித்தவர் அறிந்தே
தன் இரைப்பையில் இருந்தே
எடுத்து தருபவன்

உண்பதை தந்தான்
மிச்சத்தை உண்டான்
தன் மனம் அறிந்தான்
அவ மானம் கடந்தான்

திரையில் நடிப்பவன்
தரையில் நடப்பவன்
தாயை போலவன்
தந்தை குணத்தவன்

முயன்றவர் தோற்றவர்
தன்
தன்னுடன் இணைத்தே
வெற்றியை தந்தவன்

கலைதவம் செய்தான்
தன்னுழைபை விதைத்தான்
உள்ளத்தால் சிரித்தான்
எண்ணத்தால் உயர்ந்தான்

விஜய் சேதுபதி எனும்
மனிதா
விஜய் சேதுபதியே
மாமனிதா

-சீனு ராமசாமி

Published by
லீனா

Recent Posts

அதானி விவகாரம், அமித்ஷா பேச்சு, தற்போது வேறு பிரச்சனை! – ராகுல் காந்தி கடும் குற்றசாட்டு!

அதானி விவகாரம், அமித்ஷா பேச்சு, தற்போது வேறு பிரச்சனை! – ராகுல் காந்தி கடும் குற்றசாட்டு!

டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…

10 hours ago

ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!

ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…

12 hours ago

விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!

சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…

12 hours ago

கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!

சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…

14 hours ago

மல்லிகார்ஜுன கார்கே மீது தாக்குதல்? சபாநாயகரிடம் காங்கிரஸ் பரபரப்பு புகார்!

டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…

15 hours ago

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…

15 hours ago