இவ்வளவு சிறிய ஏலக்காயில் இத்துணை பயனா? வாங்க பார்ப்போம்!

Default Image
  • சாதாரணமாக தமிழகத்தில் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் பல உணவுகளுக்கு பயன்படுத்தப்படுவது  ஏலக்காய்.
  • உணவில் சேர்க்கப்படும் ஏலக்காய் உடலில் இருக்கும் அதிகப்படியான உப்பு, நீர், மற்றும் கிருமிகளை வெளியேற்றும்.

வாசனை பொருட்களின் ராணியாக திகழும் ஏலக்காயின் பிறப்பிடம் இந்தியா தான். இது இயற்கை எழில் கொஞ்சும் காடு சார்ந்த பகுதிகளில் விளைகிறது. இது இஞ்சி வகையை சார்ந்தது. ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடம் ஏலக்காய்க்கு உண்டு.

சாதாரணமாக தமிழகத்தில் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் பல உணவுகளுக்கு பயன்படுத்தப்படும் இந்த ஏலக்காய், ஜீரண உறுப்புகளின் கோளாறுகளை போக்குவதற்கு, வாய்ப் புண், வாய் அல்சர், மன அழுத்தம் என பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.

பயன்கள்:

உணவில் சேர்க்கப்படும் ஏலக்காய் உடலில் இருக்கும் அதிகப்படியான உப்பு, நீர், மற்றும் கிருமிகளை வெளியேற்றும். சிறு நீரகப்பை, சிறுநீரகம், சிறுநீரகக் குழாய் ஆகியவற்றை சுத்தமாக்கும். ஜலதோஷத்தால் ஏற்படும் மூக்கடைப்புக்கு உடனடி தீர்வாக நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தால் உடனடியாக மூக்கடைப்பிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

மேலும், ஏலக்காய் கலந்த தேநீர் குடிப்பதால் மன அழுத்தத்திலிருந்து எளிதில் விடுபடலாம். தொடர்ச்சியாக இதை உட்கொள்கையில் உடலில் உருவாகும் புற்றுநோய் செல்களை அளிக்கும். இதயத்தில் ரத்தம் உறையும் அபாயத்தை ஏலக்காய் தடுக்கும், ஏலக்காய் இயற்கையான ஆன்டாசிட் ஆக செயல்படுகிறது. 3 ஏலக்காயை பொடி செய்து வெதுவெதுப்பான நீரில் கலந்து, உணவு உண்பதற்கு முன் குடித்தால், வாய்வுத் தொல்லை ஏற்படாது. தொடர் விகளுக்கு மருந்தாக 2 ஏலக்காயை பொடி செய்து அதனுடன் புதினா இலைகளை சிறிது எடுத்து, நீரில் போட்டு, காய்ச்சி குடித்தால், விக்கல் நின்று விடும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்