சோயா பீன்ஸை (மீல் மேக்கர்) இப்படி தான் தயாரிக்கிறார்களா? இது நமது உடலுக்கு நல்லதா? கேட்டதா?

Published by
லீனா

சோயா பீன்ஸ் எப்படி தயாரிக்கப்படுகிறது என்றும், இது நமது உடலுக்கு எப்படிப்பட்ட நன்மை, தீமைகளை அளிக்கிறது என்பது பற்றியும் பார்ப்போம். 

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சோயா பீன்ஸை விரும்பி சாப்பிடுவதுண்டு.  ஆனால் சோயா பீன்ஸ் எதிலிருந்து பெறப்படுகிறது என்று தெரியாமலேயே சாப்பிட்டு வருகிறோம். தற்போது இந்த பதிவில் சோயா பீன்ஸ் எப்படி தயாரிக்கப்படுகிறது என்றும், இது நமது உடலுக்கு எப்படிப்பட்ட நன்மை, தீமைகளை அளிக்கிறது என்பது பற்றியும் பார்ப்போம்.

சோயா பீன்ஸை (மீல் மேக்கர்) எப்படி தயாரிக்கிறார்கள்?

இந்த சோயா பீன்ஸ் ஒரு கடினமான நிலையில் காணப்படும். இதனை வெஜிடெரியன் புரதம் என்று சொல்லலாம். இந்த சோயா பீன்ஸில் இருந்து  கிடைக்கிறது, அவரை சோயா பால், சோயா புரதம், சோயா எண்ணெய் ஆகியவை  தயாரிக்கப்படுகிறது. அதிலும், சோயா எண்ணெயை தயாரிக்கும் போது, சோயா பீன்ஸை செக்கில் செலுத்தி எடுப்பார்கள். அதன் பின்  கிடைக்க கூடிய சக்கை அல்லது புண்ணாக்கை இறைச்சி துண்டுகள் போல இருக்க வேண்டும் என்பதற்காக சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதனை விற்பனை செகின்றனர்.

சத்துக்கள் 

ஒருவர் சைவ உணவை சாப்பிடும் பழக்கம் கொண்டவராக இருந்து, இறைச்சியின் சுவையை உணர வேண்டும் என விரும்பினால் இந்த சோயாவில் இருந்து தயாரிக்கப்பட்ட மீல்மேக்கர் சரியான ஒரு உணவாகும். இந்த மீல்மேக்கரில் புரத சத்து அதிகமாக காணப்படுகிறது. இது இறைச்சி உணவிற்கு  மாற்று உணவாகும். இதில் இறைச்சிக்கு சமமான அளவு சத்துக்கள் உள்ளது. புரத சத்து குறைப்பாடு உள்ளவர்களுக்கு இது நல்ல உணவு.

தானிய வகைகளை எடுத்துக்கொண்டால், சோயாவில் தான் ஆதிகமான புரோட்டீன் காணப்படுகிறது. 100 கி சோயாவில், 28.6கி புரோட்டீன் உள்ளது. இதில் உடலுக்கு தேவையான அடிப்படை அமினோ அமிலங்கள் அனைத்தும் உள்ளது. சோயாவில் கொழுப்பு சத்து குறைவாக தான் காணப்படுகிறது. 100கி சோயாவில் 20கி கொழுப்புசத்து தான் காணப்படுகிறது. இதில் கார்போஹைட்ரேட்டின் அளவும் குறைவாக தான் காணப்படுகிறது.

பயன்கள் 

சோயாவில் நல்ல நார்சத்து இருப்பதால், தளர்ந்த, சோர்வடைந்த இதயத்திற்கு நல்ல பாதுகாப்பான உணவாகும். சோயா ஒரு இயற்கையான ஆண்டி -ஆக்சிடென்ட். மினரல்கள் சோயாவில் அதிகமாக காணப்படுகிறது.  இதனால்,சோயா எலும்புகளுக்கும், பற்களுக்கும் நல்ல பாதுகாப்பை வழங்குகிறது. மேலும் சோயாவில் உள்ள இரும்புசத்து ரத்ததை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

தீமைகள் 

இந்த சோயா நமக்கு அதிகமான நன்மைகள் தந்தாலும், இதனால் நாம் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது, இது நமது உடலில் பாதிப்பை உண்டாக்கும். இது பருப்பு குடும்பத்தை சேர்ந்தது. சிலருக்கு பருப்பு சார்ந்த உணவுகள் உட்கொள்ளும் போது, அவர்களுக்கு அது ஒத்துக்கொள்ளாது. அப்படிபட்டவர்கள் இதனை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

தொடர்ந்து மீல் மேக்கரை சாப்பிடுவதை பழக்கமாக கொண்டால், அது நமது உடலில் ஹார்மோன் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அதாவது, மலட்டுத்தன்மை, விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைத்தால் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும் தைராய்டு சுரப்பியையும் ஒழுங்காக  வேலை செய்ய விடாது.  அவ்வப்போது இந்த மீல் மேக்கரை எடுத்துக் கொள்வது சிறந்தது.

Published by
லீனா

Recent Posts

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

5 hours ago

இனி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது! பிசிசிஐ அதிரடி முடிவு!

டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

6 hours ago

RCB vs RR : விராட் கோலி அதிரடி ஆட்டம்! ராஜஸ்தான் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்கு!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

7 hours ago

RCB vs RR : சொந்தமண்ணில் வெற்றிபெறுமா பெங்களுரு? டாஸ் வென்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

9 hours ago

இது போர் தான்.., இந்தியா – பாகிஸ்தானின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள்…

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…

10 hours ago

பாகிஸ்தான் ராணுவ பிடியில் இந்திய ராணுவ வீரர்! துப்பாக்கி, வாக்கி டாக்கி பறிமுதல்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…

11 hours ago