அக்ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக்காக காரணம் இந்த பிரபல நடிகரா.?

Default Image

அக்ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாக காரணம் என்று குற்றம்சாட்டப்பட்ட நடிகரும்,அக்ஷராவின் காதலருமான தனுஜ் விர்வானி தற்போது விளக்கமளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகைகளில் ஒருவர் அக்ஷராஹாசன் . கமல்ஹாசனின் இளைய மகளான அக்ஷரா இந்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி தமிழில் விவேகம் , கடாரம் கொண்டான் ஆகிய படங்களில் நடித்திருந்தார் . தற்போது அக்னி சிறகுகள் படத்தில் நடித்து வரும் அக்ஷிதாவின் கவர்ச்சி புகைப்படங்கள் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வைரலாகியது .அதற்கு அக்ஷராஹாசன் இந்த புகைப்படங்கள் ஒரு குறும் படத்திற்காக எடுத்தது ,அதனை வேண்டுமென்றே யாரோ வெளியிட்டுவிட்டனர் என்று கூறி காவ நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அவரது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டது நடிகரான தனுஜ் விர்வானி என்று கூறப்பட்டது .இவர் பிரபல பாலிவுட் நடிகையான ரதியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது .இவரும் அக்ஷராவும் காதலித்து வந்ததாகவும் ,அவர் தான் அக்ஷராவின் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.அதற்கு மறுப்பு தெரிவித்த தனுஜ் விர்வானி தற்போது ஒரு வருடங்கள் கழித்து விளக்கமளித்துள்ளார் .

tanujVirwani

அதில் ,அக்ஷராவின் அந்த புகைப்படங்கள் வெளியாகிய போது தனக்கு அவர் கால் செய்து 2013-ல் எடுத்த புகைப்படங்கள் எப்படி வெளியாகி இருக்கும் என்று கேட்டார் . இதனை நான் செய்தேன் என்று நீ நினைக்கிறாயா என்று நான் கேட்டேன்.அக்ஷரா இல்லை என்று கூறினார் .

ஆனால் பலர் அக்ஷராவின் புகைப்படங்கள் வெளியாகியதற்கு நான் தான் காரணம் என்று கூறி பல தகவல்கள் வெளியாகியதை தொடர்ந்து நாங்கள் இருவரும் பேசுவதை நிறுத்தி கொண்டதாகவும் , இச்சம்பவத்தால் தான் மன அழுத்தத்தில் இருந்ததாகவும்,அதனை கண்ட எனது அம்மா அக்ஷராவின் குடும்பத்துடன் பேச முயன்றதாகவும்,ஆனால் தான் அதனை தடுத்து வேண்டாம் என்று கூறியதாகவும் விளக்கமளித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்