கௌதம் மேனனின் குறும்படத்தில் சிம்புவும் இந்த குறும்படத்தில் நடித்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் ஐபோனில் குறும்படம் ஒன்றை எடுப்பது எவ்வாறு என்று சொல்லி கொடுக்கும் வீடியோவை திரிஷா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்ததார். அதனை தொடர்ந்து நேற்றைய முன்தினம் அந்த குறும்படத்தின் டீசரை கௌதம் மேனன் வெளியிட்டார். அதற்கு “கார்த்திக் டயல் செய்த எண்” என்று பெயரிடப்பட்டுள்ளது. அதில் திரிஷா கார்த்திக் என்பவருடன் போனில் பேசுவது போன்ற காட்சியாகும் . அப்போது நெட்டிசன்கள் விண்ணைத் தாண்டி வருவாயா 2 தானா என்று கேள்வி எழுப்பினார்கள். மேலும் கார்த்திக் வேடத்தில் சிம்பு தான் நடிக்கிறாரா என்றும் கேட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது சிம்புவும் இந்த குறும்படத்தில் நடித்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது கார்த்திக் மற்றும் ஜெஸ்ஸியாக விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் தானோ கார்த்திக் டயல் செய்த எண் என்ற குழப்பத்தில் உள்ளனர் ரசிகர்கள். அது மட்டுமின்றி இந்த குறும் படத்தின் படப்பிடிப்பை திரிஷா தனது வீட்டில் முடித்ததாகவும், சிம்பு அவர்கள் பாதிக்கட்ட படப்பிடிப்பை முடித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த குறும்படம் முழுவதும் ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட நெருக்கடியை வைத்து இருவரும் நடத்தும் உரையாடல் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையா என்று தெரிய கௌதம் மேனன் தான் வாயை திறக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
மும்பை : பிரபல இந்திய நடிகரும் இயக்குநருமான மனோஜ் குமார் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் தனது…
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்களுடைய கவனம் முழுவதும் மும்பை வீரர்…
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று…
புதுடெல்லி : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…
கொல்கத்தா : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி நிர்வாகம் வெங்கடேஷ் ஐயரை 23.75 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துக்கொண்டது. எனவே, அவருடைய…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…