கிரஹாம் ஷேமா என்னும் சிறுவன் உகாண்டா நாட்டில் ஜூனியர் பைலட்டாக விமானம் ஓட்டி அசத்தி வருகிறார். விமானம் ஓட்டும் திறமையால் உகாண்டா பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக இடம் பெற்றுள்ளார்.
உகாண்டா தலைநகரம் கம்பாலாவின் புறநகரில் கிரஹாம் ஷேமா என்னும் ஏழு வயது சிறுவன் வசித்து வருகிறான். இவர் உகாண்டா நாட்டில் ஜூனியர் பைலட்டாக விமானம் ஓட்டி அசத்தி வருகிறார். இவரது வியக்கவைக்கும் விமான அறிவு மற்றும் விமானம் ஓட்டும் திறமையால் உகாண்டா பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக இடம் பெற்றுள்ளார்
தற்போது ஜூனியர் பைலட்டாக விமான பயிற்சி பெற்று வருகிறார். கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை விரும்பிப் படிக்கும் இந்த சிறுவன் இதுவரை மூன்று முறை விமான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். விமானம் தொடர்பாக இவரிடம் எந்த கேள்விகள் கேட்கப்பட்டாலும் சற்றும் யோசிக்காமல் சட்டென்று பதில் சொல்லுகிறார். சிறுவனின் இந்த வியக்க வைக்கும் விமானத் திறமையால் உகாண்டா மக்களாலும், சமூக வலைதளங்களிலும், இவர் கேப்டன் என்ற அடைமொழியோடு அழைக்கப்படுகிறார். சிறுவனின் திறமையை கண்டு வியந்து உள்ள உகாண்டாவின் ஜெர்மனி தூதர் மற்றும் உகாண்டாவின் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆகியோர் சிறுவனை சந்திப்பதற்காக அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த சிறுவனுக்கு விமானத்தின் மீது அதிகமான ஆர்வம் ஏற்படுவதற்கு காரணம் ஒரு துயர நிகழ்வு தான் என கூறப்படுகிறது. மூன்று வயது இருந்த போது, அவனது பாட்டி வீட்டின் கூரையில் போலீஸ் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியுள்ளது. இந்த விபத்து தான் அவருக்கு விமானத்தின் மீது ஆர்வம் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது.
மேலும் விமானங்கள், ராக்கெட்டுகள் இவைகளெல்லாம் எப்படி இயங்குகின்றன என தனது கேள்விக் கணைகளால் பெற்றோரைப் துளைத்துள்ளார். இந்த சிறுவனின் கேள்விகளுக்கு பெற்றோர்கள் தங்களுக்கு தெரிந்த வரை பதிலளித்துள்ளனர். ஒரு கட்டத்திற்கு மேல் அவனது தாயாரால் பதில் கூற இயலாத நிலையில், அதிலிருந்து விமானம் பற்றியும், ஹெலிகாப்டர் பற்றியும் அறிந்து கொள்வதற்கான ஆர்வம் ஏற்பட்ட நிலையில், இந்தக் கேள்விகளுக்கு பதில் தேடி அலைந்த சிறுவன் தான் தற்போது ஜூனியர் பைலட்டாக மாறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் ஒரு பைலட் ஆகவும், விண்வெளி வீரராகவும் இருக்க விரும்புகிறேன். ஒரு நாள் நிச்சயமாக நான் செவ்வாய் கிரகத்துக்கு செல்வேன். எனக்கு எலான் மஸ்க் தான் முன் மாதிரி. எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். அவருடன் கை குலுக்க ஆசைப்படுகிறேன். அவருடன் சேர்ந்து விண்வெளி பற்றி அறிந்து கொள்ளவும் , விண்வெளியில் பயன் பயணிக்கவும் ஆசைப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க்-க்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், சமீபத்தில் நாசா விண்வெளி வீரர்களை வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அழைத்துச் சென்றது. மேலும், விரைவில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பி வைக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் பயின்று ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து…
கஜகஸ்தான்: கஜகஸ்தானில் 72 பயணிகளுடன் சென்ற விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியது. இதில், பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அஜர்பைஜான்…
ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நள்ளிரவில் நடத்திய வான்வழி தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். ஏற்கெனவே…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் பேத்தியும், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளுமான சங்கமித்ரா அன்புமணி ,…
சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்துள்ள படம் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை…
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…